2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

25.02.2019  

AIA இன்ஷுரன்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசுட்டி மறை பெறுமதியையும் S&P SL 20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 765 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

26.02.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, டிஸ்டிலரீஸ், டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசுட்டி மறை பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 261 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ், டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது, தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

27.02.2019  

LOLC ஹோல்டிங்ஸ், AIA இன்சூரன்ஸ், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டயலொக் அக்ஸியாடா, ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி பங்குகளின் மீது, தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

28.02.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 2.1 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா, சம்பத் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, அக்சஸ் என்ஜினியரிங், டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

01.03.2019  

சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 350 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சம்பத் வங்கி உரிமை வழங்கல் குறித்த அறிவித்தல் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து, பெருமளவு விலைச்சரிவு பதிவாகியிருந்ததன் காரணமாக, 2015 ஜனவரி மாதத்துக்குப் பின்னர் பதிவாகிய ஆகக்குறைந்த தினசரி சரிவுப் பெறுமதியை S&P SL 20 சுட்டி, பதிவு செய்திருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 1.43% சரிவையும் S&P SL20 3.68% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 759 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .