Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சுருளி என்பது யார் என்ற கேள்வியுடன் தொடங்கி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வெளியாகிய ஜகமே தந்திரம் டீசரை தொடர்ந்து படமானது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த டீசரை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago