2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

அதிர்ச்சியில் ஆப்தே

Editorial   / 2020 ஜூன் 26 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவரின் செயலால்தான் அதிர்ச்சி அடைந்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தின் நாயகி ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

பொலிவுட்டில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே ஹாலிவுட்டில் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இவரது குடும்பம் இலண்டனில் இருப்பதால் படப்பிடிப்புக்கு அவ்வப்போது இந்தியா வந்து விட்டு அதன் பின்னர் மீண்டும் இலண்டன் சென்று விடுவார்.

இலண்டனில் ஒரு முறை விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு ரசிகர் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் தற்போது சோர்வாக இருப்பதால் இப்போது முடியாது என்று மறுத்து விட்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் விமானத்தில் தான் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த ரசிகர் தனது அருகே வந்து செல்பி எடுக்க முயன்றதாகவும் திடீரென தான் கண் விழித்து பார்த்த போது அந்த நபர் அலைபேசியை தன்னை நோக்கி திருப்பி செல்பி எடுக்க முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் இது போன்ற கண்ணியமற்ற செயலால் தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .