2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அனுஷ்கா இடத்தில் சமந்தா

J.A. George   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரித்திர, புராண திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன.

பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான திரைப்படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. 

இந்த நிலையில், சகுந்தலை புராண கதை திரைப்படமாக தயாராகிறது. சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப் குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கெனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி திரைப்படத்தை இயக்கியவர்.

சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். அவர்கள் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .