2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அமலா வழியில் சமந்தா

J.A. George   / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்துக்கு பின்னரும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருபவர் சமந்தா.

இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் கோவை வந்த சமந்தா அங்கு ஈஷா யோகா மையத்துக்கு சென்று சத்குருவை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

சத்குருவின் அருகில் சமந்தா உட்கார்ந்திருக்கும் இந்த புகைப்படமும் அவரது கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலையையும் பார்க்கும்போது அவர் ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டது போல் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் நடிகை அமலாபாலும் இதே போன்று ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .