2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

அர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது

Editorial   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் வீட்டில் நேற்று ஆரி மற்றும் பாலாஜி இடையே வெடித்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே பிரச்சனை வெடித்துள்ளது. 

இன்று பிக் பாஸ் வீடு கோல் சென்டராக மாற்றப்பட்டு அதில் பாலாஜி உள்ளிட்ட சில போட்டியாளர்களிடம் மற்ற போட்டியாளர்கள் போன் செய்து எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என சொல்லப்பட்டது.

அதனால் அர்ச்சனா பாலாஜிக்கு போன் செய்து ஒரு கேள்வியை கேட்டார். 'நான் சிலரை முன்னிறுத்தி விளையாடுகிறேன் என சொன்னீர்கள், அது யார் யார்? என கேட்டார். அதற்கு அவர் 'சோம், ரியோ மற்றும் கேபி' என அவர் பதில் அளித்தமை
இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்ட நிலையில், இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் இது பற்றி பாலாஜி மற்றும் அர்ச்சனா இருவரும் மோதிக்கொள்கின்றனர்.

இதன்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியதுடன்,  அக்கானு என்னை கூப்பிடாதே என அரச்சனா பாலாஜியைப் பாரத்து உத்தரவிட, பாலாஜியும் சரி அர்ச்சனா என பதிலளிக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .