Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25ஆவது படம் ‘சீதகாதி’, இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோஷனுக்காக சீதக்காதி ஐயாவின் முழு உருவ மெழுகுச்சிலை 4 மாவட்டத்துக்காக உருவாகியுள்ளது .
இந்நிலையில் மீண்டும் படத்தை புரோமோஷன் செய்யும் விதத்தில் " சீதக்காதி" படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த வீடியோவில் " நீதிமன்றத்தில் நின்று விஜய் சேதுபதி, ஒரு தத்துவமான டயலொக்கை பேசுகிறார். அதாவது " எனக்காக.. உங்களுக்காக...நமக்காக தான் அரசாங்கமே ஒழிய அரசாங்கத்துக்காக நாம் இல்லை சரிதானா ?" என்று என்று பேசி முடிக்கும் போது கைதட்டலின் ஓசையால் அரங்கமே அதிருகிறது .
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago