2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

’ஆர்ஜே பாலாஜி டயலாக் கொடுக்கவே இல்லை’

J.A. George   / 2020 நவம்பர் 19 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்மா கேரக்டரில் ஊர்வசி இந்த படத்தில் நடித்து இருந்தார். 

இந்த நிலையில் நடிகை ஊர்வசி இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார். அப்போது 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக திடீரென அம்மன் தங்களுக்கு பெரிய வீடு பணம், வசதி வாய்ப்பு எல்லாம் கொடுத்த பின்னர் வரும் காட்சியில் ஆர்ஜே பாலாஜி எங்கள் யாருக்குமே டயலாக் கொடுக்கவே இல்லை. 

திடீரென அதிர்ஷ்டம் கொட்டினால் உங்களுக்கு என்ன தோன்றுமோ, அதை செய்யுங்கள் என்று கூறிவிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

அதன்பின்னர் நாங்களாக யோசித்து என்ன செய்ய என்றே தெரியாமல் ஆளாளுக்கு வசனம் பேசினோம். அதைவிட அந்த காட்சியில் நாங்கள் என்ன பேசினோம் என்பதை டப்பிங்கில் ஞாபகப்படுத்தி பேசியது பெரிய நகைச்சுவை என்று கூறினார்.

மேலும் இந்த படத்தில் எனக்கு நயன்தாராவுடன் ஒரு நட்பு கிடைத்தது. உண்மையில் இந்த கேரக்டரில் நடிக்க எனக்கு திகதி இல்லாமல் இருந்த நிலையில் நயன்தாரா என்னிடம் நீங்கள் தான் இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நான் மலையாளத்தில் திலீப் படத்தில் ஓப்பந்தம் ஆகியிருந்த நிலையில் அவர்தான் திலீப்பிடம் பேசி கால்ஷீட்டை மூக்குத்தி அம்மன் படத்திற்காக மாற்றி தந்தார். அது எனக்கு உண்மையில் மறக்க முடியாத அனுபவம் என்று ஊர்வசி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .