2020 ஜூன் 03, புதன்கிழமை

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அடுத்து, அதே படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்காக தல அஜித் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித்தின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தில் அஜித் முறுக்கு மீசையுடன் உள்ளார். ‘தல 60’ படத்தில் அஜித் பொலிஸ் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் இந்த 

முறுக்குமீசை கெட்டப் பொலிஸ் கேரக்டருக்கு பொருத்தமாகவும் கம்பீரமாகவும்  இருக்கும் என்று கருதப்படுகிறது.

‘தல 60 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசெம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X