2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய படங்கள் பாகிஸ்தானில் திரையிட அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவை துண்டிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அத்துடன், வர்த்தக நடவடிக்கையை முடக்கியுள்ள பாகிஸ்தான், ரயில் போக்குவரத்து, விமான வான்வழி பாதை தடை போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையிலேயே, இந்திய படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் Firdous Ashiq Awan கருத்து வெளியிட்டுள்ளார்.

‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என, அவர் கூறினார்.

இந்தியாவின் பொலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் அதிக செல்வாக்கு காணப்படுகின்றது. அங்குள்ள திரையரங்குகளில் சுமார் 70 சதவீதம் இந்திய திரைப்படங்களே திரையிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .