2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இன்றும் கண்ணீர் விட்ட அனிதா!

J.A. George   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அனிதா சம்பத், நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே மற்றொரு போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி உடன் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் நான்காவது நாள் முதல் ப்ரொமோ வீடியோவில் அனிதா சம்பத் இந்த விஷயம் பற்றி கண்ணீர் விட்டு அழுது இருப்பது காட்டப்பட்டிருக்கிறது.

"நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பெயரை சம்பாதித்து இருக்கிறேன். இதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என ரொம்ப கஷ்ட படுகிறேன். என்னை யார் கூடவும் கம்பேர் பண்ணாத ப்ளீஸ். 

எனக்கு அட்ரஸ் கிடையாது. நமக்கென ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டில் நான் தான் Parent மாதிரி. என்னுடைய அப்பா அம்மா தம்பி ஆகியோர் குழந்தைகள் மாதிரி. 

எனக்கு எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கும் பழக்கம் கிடையாது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறேன்" என அனிதா சம்பத் கண்ணீருடன் பேசியிருக்கிறார். 

அதனால் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் இடையேயான பிரச்சனை இன்றும் தொடரும் என்பது உறுதியாக தெரிகிறது.

அனிதா சம்பத் தொடர்ந்து குறும்படம் வேண்டும் எனக் கேட்டு வருவதால் அவரை முதல் சீசன் போட்டியாளரான ஜூலியுடன் ஒப்பிட்டு இப்போது ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X