2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் காலமானார்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று ரொபர்ட் - ராஜசேகர் என்ற இரட்டை இயக்குநர்களில் ஒருவராகிய ராஜசேகர் இன்று காலமானார்.

ரொபர்ட்-ராஜசேகர் ஆகிய இரட்டையர்கள் பாலைவனச்சோலை, கல்யாண அகதிகள், தூரம் அதிகமில்லை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

மேலும் ராஜசேகர் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘சரவணன் மீனாட்சி’ உள்பட ஒருசில தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை சங்கத்திலும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பணிபுரிந்த ரொபர்ட் கடந்த ஆண்டு உடல்நலக்கோளாறால் காலமானார். 

மறைந்த நடிகர் ராஜசேகருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X