2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இறைவி நம்பிக்கை

George   / 2016 மே 30 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயக்கம் என்ன திரைப்படத்தில் நடித்தவர்தான் பூஜா திவாரியா. அவர் தற்போது இறைவி, குற்றமும் தண்டனையும், ஆண்டவன் கட்டளை உட்பட அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்தத் திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடிக்கவில்லை என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில்; நடித்து வருவதாக தெரிவிக்கும் பூஜா, அதில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படத்தில் தனக்கு வெயிட்டான வேடம் என்கிறார்.

இதுகுறித்து பூஜா திவாரியாவிடம் கேட்டபோது, 'சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அதனால், கிடைத்த வேடங்களில் தற்போது நடித்து வருகிறேன். 

இதில் இறைவி திரைப்படத்தில் அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் இருந்தபோதும் எனக்கும் முக்கியமான வேடம் கிடைத்துள்ளது. அதனால், ஜூன் 3ஆம் திகதி வெளியாகும் இறைவி திரைப்படம் எனக்கு நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' என்கிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .