2020 ஜூலை 15, புதன்கிழமை

உடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு!

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மகாநதி. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது. 

 இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்தார். அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதின் காரணமாக இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். 

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்ததற்கு தேசிய விருதும் பெற்றார்.

இதனை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

அதேபோல தமிழில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த மைதான் படம் உருவாகி வருகிறது.  

இந்நிலையில் மைதான் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷை மைதான் படக்குழு நீக்கியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய உடல் வாகு என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X