2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஒஸ்காருக்கு சென்ற ’சூரரைப் போற்று’!

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சூரரைப் போற்று'.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களும் ஒஸ்கார் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில், பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

இதையடுத்து இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஒஸ்கார் மேடையில் அறிவிப்பார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .