2020 ஜூலை 15, புதன்கிழமை

ஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

92-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது. 

இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஹொலிவுட் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 

ஹொலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

விருதுகள் விவரம்:

* சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்

* சிறந்த சர்வதேச படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது கொரியா படமான பாரசைட்

* சிறந்த அனிமோஷன் குறும்படத்துக்கான விருதை தட்டி சென்றது ஹேர் லவ்.

* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தட்டி சென்றது ஜோஜோ ராபிட் திரைப்படம்.

* நடிகர் பிராட்பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது.

* லாரா டெர்ன்-க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது.

* சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது லிட்டில் வுமன் திரைப்படத்திற்காக ஜாக்குலின் டுரனுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது 'ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹொலிவுட்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

* அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான ஒஸ்கார் விருது.

* THE NEIGHBOURS WINDOW திரைப்படத்துக்கு சிறந்த அக்ஷன் குறும்படத்துக்கான விருது.

* சிறந்த ஒலி கலவைக்கான விருதை ‘1917’ திரைப்படம் வென்றது.

*  சிறந்த ஒலித்தொகுப்புக்கான ஒஸ்கார் விருதை போர்ட் v பெராரி திரைப்படம் வென்றத.

*  டாய் ஸ்டோரி-4 திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது.

* 1917 திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 3 பிரிவுகளில் ஒஸ்கார் விருதை பெற்றது.

* சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஒஸ்கார் விருதை 'பாம் ஷெல்' திரைப்படம் தட்டிச் சென்றது.

* சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதினை வென்றது ராக்கெட் மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற LOVE ME Again பாடல்..! 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X