2021 மார்ச் 03, புதன்கிழமை

கங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை

J.A. George   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கங்கனாவை பொலிஸார் விசாரணைக்கு அழைக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

நடிகை கங்கனாவும் அவர் சகோதரி ரங்கோலியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுடைய கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையாகி பிரச்சனையாக மாறிவிடுகிறது. இந்த நிலையில், வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என கங்கனா தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், கடந்த 8ஆம் திகதி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரியிடம் பொலிஸார்  2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யகோரி கங்கனாவும் ரங்கோலியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன், அதுவரை கங்கனா மற்றும் ரங்கோலியை விசாரணைக்கு அழைப்பது, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .