2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காஜலின் நம்பிக்கை

J.A. George   / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்துக்கு பிறகு தான் நடித்து வரும் இந்தியன்-2, ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரும்போது தானும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகையாகி விடுவேன் என்று நம்பும் காஜல், தான் நடித்து வந்த மொசகலு என்ற தெலுங்கு திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டதால் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜெப்ரிசின் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ருஹானி சர்மா, நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வாலும் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதோடு மார்ச் 11இல் இந்தத்திரைப்படம் திரைக்கு வருகிறது. ஹொலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மொசகலு, தனது சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் காஜல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .