Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி
வெளியானது.
இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக தலைமை கழகம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தேமுதிக தலைவர் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு
செல்வது வழக்கம்.
அந்த வகையில் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசானகொரோனா அறிகுறி தென்பட்டதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது.
தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .