2019 ஒக்டோபர் 19, சனிக்கிழமை

கமல் கேள்வியால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் படலம் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். 

எவிக்சன் பட்டியலில் உள்ள ஐவரில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கமல் கூற அதற்கு ஐவருமே தலையாட்டுகின்றனர். 

மேலும், பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்தடுத்து வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியை கமல் எழுப்புகிறார். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் குழப்பம் அடைகின்றனர். 

இன்று வனிதா வெளியேறிவிட்டதாக ஏற்கனவே செய்தி வந்துள்ள நிலையில் மீதி இருப்பவர்கள் தர்ஷன், கவின், சாண்டி, முகின், சேரன், லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய ஏழு பேர்கள் தான். 

இந்த ஏழு பேர்களில் நால்வர் இறுதி போட்டிக்க்கு செல்வார்கள் என்றால் மீதி மூன்று பேர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறுவார்கள். 

அந்த  மூவர் யார்? இறுதிப்போட்டிக்கு செல்லும் அந்த நால்வர் யார்? என்பதை இன்று கமல் முன் போட்டியாளர்கள் கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .