2020 ஓகஸ்ட் 13, வியாழக்கிழமை

’கவர்ச்சியாகப் பார்க்க முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் இருந்து  வருகைதந்து தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவரை பலரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார்.  பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட நிலையில் திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருந்தன.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த வருடத்தில் நான்கு படங்களில் மட்டுமே நடித்தேன். கதை பிடித்து இருந்ததால் தான் நடித்தேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். இனி வித்தியாசமான கதை உள்ள படங்களில்தான் நடிப்பேன். எனது முந்தைய படங்களைப்போல கவர்ச்சியாக பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--