Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், அண்மையில் கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின.
ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.
தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட அதிதி பாலன், அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025