Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் அந்தோணி பிக்பாஸ் வீட்டின் உள்ளே இன்று வருகிறார்.
கவினை நோக்கி பிரதீப் அந்தோணி கூறியபோது, ‘ஒரு கடமை பாக்கி உள்ளது. இவ்வளவு கேவலமா நீ ஆடின கேமுக்கு, மட்டமா ஒரு விஷயம் பண்ணினதுக்கு, உன்னை நம்புனவங்கள கைவிட்டதுக்கு, இங்க இருக்கின்ற எல்லாரையும் மனம் புண்படுத்தியதற்கு, நான் இப்ப ஒரு விஷயம் செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சுட்டு பெரிய ஆளா ஆயிட்டின்னா, என்னை மேடையில கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ’ என்று கூறிவிட்டு கவின் கன்னத்தில் பளார் என அறை விட்டார் பிரதீப்.
கவின் நண்பரின் இந்த செய்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக லொஸ்லியா கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கெனவே லொஸ்லியாவின் தந்தையின் வருகைக்கு பின் கவின் தனது தவறை உணர்ந்து, இனிமேல் நம்மால் யாரும் மனம் வருந்தக்கூடாது என்று முடிவெடுத்துள்ள நிலையில் நண்பரின் இந்த அறை விழுந்துள்ளது.
4 minute ago
19 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
25 minute ago
33 minute ago