2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

சமந்தா பெருமிதம்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்துக்கு பின்னும் சமந்தா முன்னணி நாயகிகளில் ஒருவராகவே இருக்கிறார். கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சில பல வாரங்களாகவே சமூக வலைத்தளம் பக்கம் வராமலிருந்தார்.

இப்போது மீண்டும் அடிக்கடி பதிவுகளை இட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ராணா டகுபட்டியின் ரோகோ நிகழ்ச்சியில் நாகசைதன்யாவும், சமந்தாவும் கலந்து கொண்டுள்ளனர். ராணாவின் அத்தை மகன் தான் நாகசைதன்யா.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தை நேற்று சமந்தா பதிவிட்டிருந்தார். இன்று அப்போது எடுக்கப்பட்ட நாகசைதன்யாவின் தனி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'எனது கணவர் எவ்வளவு ஹேண்ட்சம் ஆக இருக்கிறார் பார்த்தீர்களா' என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு நாகசைதன்யா, “இது பணம் கொடுத்து பதிவிட்ட ஒன்று போல் இருக்கிறது,” என மனைவி சமந்தாவைக் கிண்டலடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .