2020 ஓகஸ்ட் 07, வெள்ளிக்கிழமை

’சர்கார்’ குறித்து அதிருப்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “சர்கார்” திரைப்படம், தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது.

விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “சர்கார்” திரைப்படத்தின் வியாபாரம், விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 2 பில்லியன் (200 கோடி) இந்திய ரூபாய்க்கு, இந்தத் திரைப்படத்தின் வியாபாரம் இடம்பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், “சர்கார்” திரைப்படத்தின் டீஸர், கடந்த 19ஆம் திகதி வெளியாகி, விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், “சர்கார்” திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியின் சில ஷொட்களும் டீஸரில் இடம்பெற்றுள்ளன. அதில், வில்லனின் ஆளை அடித்து தன்னுடைய தோளில் போட்டுக்கொண்டு விஜய் நிற்பதுபோல் ஒரு ஷொட் இடம்பெற்றுள்ளது.

அச்சு அசலாக இதே ஷொட், அல்லு அர்ஜுன் நடித்து 2017இல் வெளியான “டிஜே என்கிற துவ்வாட ஜெகன்னாதம்” என்ற தெலுங்குத் திரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. அதை அப்படியே பிரதி செய்தே, “சர்கார்” திரைப்படத்தின் சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

1 பில்லியன் (100 கோடி” இந்திய ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் “சர்கார்” திரைப்படத்தின் சண்டைக்காட்சி கூட ஒரிஜினல் இல்லையா? என்று, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியின்மை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--