2020 ஜூன் 04, வியாழக்கிழமை

தமன்னாவுக்கு 12

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமன்னாவின் மார்க்கெட் நிலவரம், சுமாராகத் தான் உள்ளது. “சயீரா நரசிம்ம ரெட்டி” எனும் வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, தலா ஒவ்வொரு தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

 

இந்நிலையில், சினிமா பற்றிக் தமன்னா கூறியுள்ளதாவது,

 

நான் சினிமாத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதலில் இந்தத் துறை பற்றி எதுவும் புரியவில்லை. தற்போது இந்தத் துறை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளேன். அதனால், நான் ரொம்பத் தெளிவாக உள்ளேன்.

“நடிக்க வந்தப் புதிதில், என்னைத் தேடிவந்த திரைப்பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றேன். அதனால், சில திரைப்படங்கள் எனக்கு எதிராக அமைந்துவிட்டன. அதன் பிறகே, ஒரு தெளிவு ஏற்பட்டு எனக்கு ஏற்றத் திரைப்படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறேன். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்துள்ள போதிலும், “பாகுபலி” திரைப்படம் வெளியான பிறகே, மக்கள் என்னை நல்ல நடிகையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

“நான் பொலிவூட் திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். நேரடி ஹிந்தித் திரைப்படங்களில் நடித்தபோது கிடைக்காத அங்கிகாரம், “பாகுபலி” இந்தி டப்பிங் மூலம் கிடைத்தது. ஒரு திரைப்படத்தை தேர்வு செய்து நடிக்கும் போதே, இந்தத் திரைப்படம் ஹிட்டாகுமா, தோல்வி அடையுமா, நமக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்குமா என்றெல்லாம் கூறிவிட முடியாது. அனைத்துத் திரைப்படங்களையும் முக்கியமான திரைப்படங்களாக நினைத்தே நடிக்கிறோம்.

“இந்தத் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறுமென்று நினைத்தால், அது தோல்வி அடைந்துவிடும். சில திரைப்படங்கள் மீது, அவ்வளவாக நம்பிக்கை ஏற்படாது. ஆனால், அந்தத் படங்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும். அதனால், திரைப்படங்களின் வெற்றி, தோல்வியைக் கணிக்க முடியாது. அது ரசிகர்களின் கையில் உள்ளது. சினிமாத் துறையில், எதையும் கணிக்க முடியாது. நல்லத் திரைப்படங்கள் எப்பொழுது கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று தெரியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நல்ல திபை்பட வாய்ப்பு கிடைக்கும். திடீர் என்று நம் உயரத்தை அடைந்துவிடுவோம்” என்கிறார் தமன்னா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X