2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

’தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்’

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்பதால் அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டுவருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.  வயதானாலும் ரஜினியின் மாஸ் துளியளவும் குறையவில்லை.

இந்நிலையில் ரஜினியின் படத்தை தயாரிக்க சன் டி.வி தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி  நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சரஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது சன் பிக்சர்ஸ் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  

படத்தில் ரஜினி முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  ஆகையினால் இந்த படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.  மேலும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதுடன், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .