2020 மே 28, வியாழக்கிழமை

‘நிச்சயதார்த்தம் அல்ல’

Editorial   / 2020 மே 22 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ராணா டகுபதிக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என அவருடைய தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு லீடர் என்கிற தெலுங்கு திரைப்படம் ஊடாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராணா. எனினும், பாகுபலி திரைப்படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது.

ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் அண்மையில் அறிமுகப்படுத்திய ராணா டகுபதி, காதலி மிஹீகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். இதையடுத்து அவருக்கும் மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகச் செய்தி  வெளியானது.

இந்த நிலையில், ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இதை மறுத்துள்ளார். “நடைபெற்றது நிச்சயதார்த்தம் அல்ல. நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கும் திருமணத் திகதி குறிப்பதற்கும் முன்பு மணமக்களின் பெற்றோர்கள் சந்தித்துக் கொள்வது தெலுங்குக் குடும்பங்களின் வழக்கமாகும். அதுதான் நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X