Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 06 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று(06) இரவு நடிகை யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது நுங்கம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து அந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளதான செய்தி வெளியாகி உள்ளது
இந்த விபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் பரத் என்பவர் படுகாயமடைந்து அவர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இந்த காரில் இருந்தவர்கள் மது அருந்தியுள்ளதாகவும், இந்த காரில் வந்த யாஷிகா, விபத்து ஏற்பட்டதும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் காரில் யாஷிகா சென்றதாகவோ, அவர் மது அருந்தியிருந்ததாகவோ பரவி வரும் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago