2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

நாயகிக்கு அதிர்ஷடம்

Editorial   / 2020 ஜூன் 26 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘பேட்ட’ திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பினால் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

ரஜினிகாந்த், விஜய் என இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்த யோகம், தற்போது இவருக்கு பொலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது.

ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படத்தை இயக்கிய ரவி உத்யவார் அடுத்ததாக தான் இயக்கும் திரைப்படத்தில் மாளவிகா மோகனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இந்தத் திரைப்படத்தில் மாளவிகாவுக்கு எக்ஷன் காட்சிகளும் நிறைய இருக்கிறதாம். கதாநாயகனாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கிறார்.

இருவரும் இந்தத் திரைப்படத்துக்காக  பயிற்சி எடுத்து வருகிறார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .