2021 மார்ச் 03, புதன்கிழமை

நித்தியாவுக்கு அட்வைஸ்

J.A. George   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்து, அதை தனது கடினமான உழைப்பால் தக்க வைத்து கொண்டவர் தான் நித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நித்யா மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், துல்கர் தான் திருமணம் செய்து கொள்ள பல்வேறு விதங்களில் முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப்பற்றி நித்யா மேனன் கூறுகையில், 'துல்கர் ஒரு குடும்பஸ்தர். அவர் என்னிடம் வந்து அவருடைய கல்யாண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்றும், கல்யாணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல்வேறு விதங்களில் சமாதானப்படுத்தினார்' என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் 32 வயதாகியும் நித்யாமேனன் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நித்யா மேனன் மற்றும் துல்கர் சல்மான் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .