2020 ஜூன் 03, புதன்கிழமை

பிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிகில் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததையடுத்து, படத்தை தீபாவளி நாளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் பிகில். இந்த படத்திற்கு  தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சூழ்நிலையில் பிகில் படத்தை பார்த்து ஆய்வு செய்த தணிக்கை குழு உறுப்பினர்கள், தற்போது இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். 

இதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். பிகில் படம் சுமார் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது. 

யுஏ சான்றிதழ் என்பதால் விஜய் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். 

அண்மையில், பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுது யுஏ சான்றிதழ் கொடுத்து இருப்பதால் படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X