2020 மார்ச் 30, திங்கட்கிழமை

படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா? பரபரப்பு தகவல்!

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித் பைக் சேசிங் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது காயமடைந்ததாகவும் இருப்பினும் அவர் ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின் படப்பிடிப்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடிவடைந்த பின் அவர் தனது குடும்ப டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அவர் மீண்டும் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

மேலும் அஜித் புதிய ஏர்கிராப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் ’வலிமை’ படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்று வெளியான வதந்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். 

அஜித் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து ஒத்துழைப்பு தருவதாகவும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .