2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பணத்தாள் போர்வைக்குள் நடிகை

J.A. George   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பிரியா ஆனந்த், வெப் சீரிஸ் ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர்வை போல் போர்த்திக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் 

எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமான நடிகை பிரியா ஆனந்த், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம், பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்தி வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை. உண்மை  என்றும் சொல்லவில்லை.

இந்த நிலையில், ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். அதில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

அந்த வெப் சீரிஸில் உடல் முழுக்க 2000 ரூபாய் பணத்தாள்களால் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .