2020 ஜூலை 15, புதன்கிழமை

புதிய கூட்டணி

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என செய்தி வெளியாகியுள்ளது.

‘சீயான் 60’- ஐ இயக்குவதற்கு கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நடிகருக்கு நெருக்கமான நம்பகமான வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

கோப்ராவுக்குப் பிறகு லலித் குமார் மீண்டும் விக்ரம் திரைப்படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் பட்சத்தில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இரண்டு தேசிய விருது வென்றவர்களின் (பிதாமகன் – விக்ரம், ஜிகார்தண்டா – கார்த்திக் சுப்புராஜ்) இந்த புதிய கூட்டணி இணையவுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X