Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷ் அண்மையில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் D40 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பழனி அருகே கோம்பைப்பட்டியில் நடைபெற்று வருகிறது.
இதற்காக தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி சென்றிருந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.
சபரிமலைக்குச் செல்வோர், விடுமுறை காலம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கோயில் நிர்வாகத்தினர் தனுஷ் குடும்பத்திற்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நடிகர் தனுஷின் வருகையை அறிந்த பக்தர்கள் அவரை காண திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .