2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பழம்பெரும் ஹொலிவுட் நடிகை காலமானார்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் ஹொலிவுட் நடிகை டயானா ரிக். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களிலும், கேம் ஆப்தி த்ரோன்ஸ், அவெஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். 

82 வயதான டயானா ரிக் லண்டனில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அவரது மகள் ராச்சல் ஸ்ரிலிங் அறிவித்திருக்கிறார்.

“எனது அன்பான அம்மா மரணம் அடைந்தார். அதிகாலையில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரை சுற்றிலும் குடும்பத்தினர் இருந்தோம். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார். தொழிலில் அதிக ஈடுபாடு காட்டினார்” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--