2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

பிக்பாஸ் வீட்டில் உடைந்த கூட்டணி

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் வனிதா, கஸ்தூரியின் வரவுக்கு பின் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து உள்ளனர்.

சேரன், வனிதா, கஸ்தூரி ஆகிய மூவர் கூட்டணி ஒருபுறமும், கவின், லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் தர்ஷன் ஆகிய ஐவர் கூட்டணி இன்னொரு புறமும் உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய பள்ளி டாஸ்க்கின்போது திடீரென வனிதா, கஸ்தூரி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். 

ஒரு பள்ளி குழந்தைக்கு போராட எப்படி தெரியும்? எனவே அவரை வொர்ஸ்ட் பெர்மார்மர் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று ஷெரினிடம் சேரன் கூறுகிறார். 

அதேபோல் கஸ்தூரி டீச்சர் கேரக்டரை சரியாக செய்யவில்லை என்பதால் அவரையும் வொர்ஸ்ட் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று சேரன், தர்ஷனிடமும் கூறிவருகின்றார்.

நாளை நடைபெறவிருக்கும் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் பெர்பார்மர் பட்டியலை இன்றே தயாரிக்க சேரன் முடிவு செய்ததில் இருந்து வனிதா, கஸ்தூரியை அவர் ஜெயிலுக்கு அனுப்ப திட்டமிடுவதாகவும் இதனையடுத்து மூவர் கூட்டணி மூன்றாக உடைந்துவிட்டதாகவும் தெரிகிறது. 

மேலும் ஏற்கனவே வனிதாவும் கஸ்தூரியும் பிக்பாஸ் வீட்டில் முட்டிக்கொண்டு இருக்கின்றனர். நேற்று கூட தான் குண்டாக இருப்பதை கஸ்தூரி சுட்டிக்காட்டியதாக வனிதா கோபம் அடைந்தார். 

இந்த நிலையில் இருவரும் சிறைக்கு சென்றால் சிறை என்ன ஆகுமோ.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X