Editorial / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிய விருந்தாளி ஒருவர் வந்து இருக்கின்றார். அவர் தமிழர்கள் மறந்துபோன பல கிராமிய கலைகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
முதல் கட்டமாக பொம்மலாட்டம் கலையை அவர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கற்றுத் தருகிறார். அவர் கற்றுத்தந்த இந்த கலையை ஒவ்வொருவரும் தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் அறிவுரையாக உள்ளது.
பிக்பாஸ் வீடு இந்த வாரம் இரண்டு கிராமங்களாக பிரிந்து கிராமிய மணம் வீசி வருகிறது. போட்டியாளர்களும் கிராமத்து உடையை அணிந்து காட்சி அளிக்கின்றனர்.
கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராமத்து டாஸ் நடந்தபோது சேரன் மற்றும் மீராமிதுனுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த கிராம டாஸ்க்காவது சண்டை, சச்சரவு இல்லாமல் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
9 minute ago
20 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
24 minute ago
36 minute ago