2020 ஜூலை 15, புதன்கிழமை

முன்னணி நாயகிகள் மோதல்?

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நாயகியான பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா தொடர்பான மீம் ஒன்றை பகிர்ந்து "இவர் எனக்கு அழகாக தெரியவில்லை" என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது சமந்தா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கி நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் தனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பூஜா ஹெக்டே, ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். அத்துடன், அதற்கு முந்தைய ஒரு மணி நேரத்தில் பகிரப்பட்ட, இயக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் நீக்கிவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதனையடுத்து, சமந்தாவின் பதிவும் நீக்கப்பட்டு இருந்தது. எனினும், இதனை ஏற்றுக்கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜா ஹெக்டே சமந்தாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், #PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நடிகை சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியான தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X