2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்

J.A. George   / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்து, அடுத்த கட்டமாக ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்க விருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

இனி விஜய்யின் திரைப்பட தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் இந்த சேனலில் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த சேனலை பின் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், இந்த சேனல் அவரது பிரச்சாரத்திற்கும் பயன்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .