2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு

A.K.M. Ramzy   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ இராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பமாகி உள்ளனர். 

இம்மாதம் 15ஆம் திகதி அபூர்வ இராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல

திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதனைதொடர்ந்து ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .