2020 ஜூலை 15, புதன்கிழமை

ராஷ்மிகாவுக்கு பாராட்டு

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து சமந்தா தெரிவித்த கருத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் , ‘ராஷ்மிகா மந்தனாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு ‘ராஷ்மிகா கடும் உழைப்பாளி என்று தெரிகிறது. குறிப்பாக அவரது அந்த நடன அசைவுகள் அருமை’ என்று பாராட்டினார் சமந்தா.

இது குறித்து அறிந்த ராஷ்மிகா உடனடியாக நன்றி தெரிவித்ததுடன், பாசத்துடன் கட்டியணைக்கும் சித்திரம் ஒன்றையும் சமந்தாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

இருவரது இந்த பண்பான, அன்பான அணுகுமுறையை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X