Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சில மாதங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பற்றி சமூக வலைதள சர்ச்சைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதில் பலரின் பெயரும் அடிபட்டது.
இந்தச் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், ராஜு காரி காதி- 2 திரைப்படத்தில், சமந்தா நடித்துள்ளாராம். பெண்களுக்கான பிரச்சினையை சமூகவலைதளங்களில் பார்த்து, இரசித்து, பரப்பிவிடுவோருக்கு மெசேஜ் சொல்லும் திரைப்படமாக இது இருக்கிறதாம்.
இம்மாதம் 6,7ஆம் திகதிகளில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தன் அடுத்த வேலைகளை தொடங்கிவிட்டாராம். அத்தோடு மகாநதி திரைப்படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்துவிட்டாராம்.
மேலும் மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சனான அட்ரிந்தி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதோடு, ராம் சரணுடன் ரங்கஸ்தலம் திரைப்படத்தில், இம்மாதமே கலந்து கொள்கிறாராம்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .