2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

லொஸ்லியா காதலை விட ... ஆவேசமடைந்த நடிகர்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பதைகையால் இழக்கப்பட்டுள்ளது. அதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பேசிய நடிகர் ஆரி மேலும் கூறுகையில், “கடந்த இரண்டு மூன்று நாட்களாக கவின் லொஸ்லியா காதல் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேரன் குறித்தும் பலர் பேசுகின்றனர். 

சேரன் காதலுக்கு எதிரியில்லை. விளையாட்டை விளையாடுங்க. காதல் இருந்தா வெளியே போய் வைத்து கொள்ளுங்கள்’ என்றுதான் சொன்னார். 

பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் பதாகை கலாசாரம்.

யாருக்கோ வைத்த பதாகை  அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். 

இதுபோன்ற சம்பவம் எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். நிஜத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த பின்னர் ஐந்து இலட்சம் ரூபாய் கொடுத்து பலனில்லை. நீதிபதி கண்டித்தும் பயனில்லை. 

இங்கே உயிருக்கு மதிப்பே இல்லை. இதற்கு மாற்றம் வேண்டும் சட்டம் கடுமையாக வேண்டும்.

சினிமாத்துறை சார்ந்தவர்களும் பதாகை  வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். பதாகை வைப்பதை விட விளம்பரம் செய்வதற்கு வெளிநாடுகள் போல இங்கும் செய்யலாம். 

பதாகைகாக போன கடைசி உயிர் சுபஸ்ரீயாகத்தான் இருக்கவேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ’தர்பார்’ படத்திற்கு பதாகை வைக்கக் கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும். 

ரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் ஆகியோர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும். பதாகை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .