2020 ஓகஸ்ட் 07, வெள்ளிக்கிழமை

வனிதாவை செமையாய் கலாய்த கமல்!

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் வனிதா பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும் வரை வேறு யாரும் பேச முடியாது. யாராவது பேச முற்பட்டாலும் அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் தனது உரையை தொடங்குவார். 

வனிதாவின் டாமினேஷன் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனிடமும் தொடர்கிறது. கமல்ஹாசன் பேசும்போது கூட அவர் குறுக்கே பேசுவதும், வனிதா பேசிக்கொண்டிருக்கும்போது கமல் குறுக்கிட்டால், ‘ஒரு நிமிஷம் சார் நான் சொல்லி முடிச்சுர்ரேன்’ என்று கூறுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் வனிதாவின் இந்த குணத்தை இன்று கமல் செமியாய் கலாய்ப்பது போன்று முதல் ப்ரமோ வெளிவந்துள்ளது. 

கமல் பேசும்போது வனிதா குறுக்கே பேச, ‘இருங்க நான் சொல்ல வந்ததை சொல்லிட்ரேன், இல்லாவிட்டால் மறந்துவிடுவேன், மறந்துட்டேன்’ என்று நடிக்க வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. 

இதேபோல் கமல் டிவி முன் தோன்றுவது தெரியாமல் சாண்டி ஹாயாக சோபாவில் படுத்திருக்க, பின் திடீரென எழுந்து ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக கூறும் நகைச்சுவையும் இன்றைய ப்ரமோவில் உள்ளது. 

மொத்தத்தில் வனிதாவுக்கு இன்றும் கமல் பாடம் எடுப்பார் என தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--