Editorial / 2026 ஜனவரி 30 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகக் கலைஞரும் எழுத்தாளருமான பாலா சங்குபிள்ளை காலமானார்.
1957 மே 12ஆம் திகதியன்று பிறந்த சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.
ஹட்டனில் பிறந்த சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலை, கண்டி அசோகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். .
பாலா சங்குப்பிள்ளையின் முதலாவது சிறுகதை 1980ம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் 'புதிய தீர்ப்பு' எனும் தலைப்பில் பிரசுரமானது. 1990ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் இவரது முதலாவது கதை ஒலிபரப்பானது. இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150க்கு மேற்பட்ட அரசியல், அறிவியல், ஆரோக்கிய, சினிமா, இலக்கக் கட்டுரைகளையும், நான்கு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் துரைவி வெளியீட்டகத்தின் மூலமாக வெளியான 'உழைக்கப் பிறந்தவர்கள்' சிறுகதைத் தொகுதியிலும், மணிமேகலைப் பிரசுரமாக வெளியான மூன்று இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
காதலுனுக்குக் கல்யாணம் (சிறுகதைத் தொகுதி), ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைத் தொகுதி) ஆகிய இரண்டு இரண்டு நூல்களை பாலா சங்குப்பிள்ளை எழுதி வெளியிட்டுள்ளார்.
1998ம் ஆண்டு 05ம் மாதம் 31ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இவரின் சிறுகதைத் துறைக்காகவும்,
2006 ஜனவரி 28,29ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது இவரின் எழுத்தாக்கத் துறைக்காகவும்,
2006 டிசம்பர் 17ம் திகதி கண்டியில் நடைபெற்ற 2006 - மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது சிறந்த நூலுக்காகவும் கௌரவிக்கப்பட்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago