2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

வனிதாவை திட்டம் போட்டு மீண்டும் காப்பாற்றிய பிக்பாஸ்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் டாஸ்குகளில் சிறப்பாக செயற்பட்டவர்கள் கெப்டன் பதவிக்கான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதும், மோசமாக செயற்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவதும் உண்டு.

இந்த நிலையில் இந்த வார டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, சேரன் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மூவரும் கெப்டன் பதவிக்கான போட்டியில் தேர்வு பெற்றனர். 

இதில் வனிதா தான் நன்றாக ஃபெர்மான்ஸ் செய்ததாகவும் சேரன் தன்னுடைய கேரக்டரை சரியாக செய்யவில்லை என்றும் வாதாடினார். இருப்பினும் அவரது வாதம் மற்ற போட்டியாளர்களிடம் எடுபடவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் மோசமாக ஃபெர்மான்ஸ் செய்தவர்களை தேர்வு செய்யும்போது வனிதாவின் பெயரை கூற வேண்டும் என்று ஏற்கனவே சேரன் ஒருசிலரிடம் பேசி முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தார். 

அதனால் மோசமாக ஃபெர்மான்ஸ்  செய்தவர்களாக வனிதா, கஸ்தூரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. 

ஆனால் திடீரென இந்த வாரம் மோசமான ஃபெர்மான்ஸ் செய்தவர்கள் பட்டியல் தேவையில்லை என்று பிக்பாஸ் அறிவித்து வனிதாவையும் கஸ்தூரியையும் காப்பாற்றிவிட்டார்

ஏற்கெனவே மக்கள் ஓட்டு போட்டு வெளியேற்றிய வனிதாவை மீண்டும் இந்த போட்டியில் சேர்த்துள்ள பிக்பாஸை பார்வையாளர்கள் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது வனிதாவை ஜெயிலுக்கு போவதிலும் இருந்து பிக்பாஸ் காப்பாற்றியது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சேரனுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .