2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்! வெளியேறப்போவது யார்?

J.A. George   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ்  முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்பதால் நாமினேஷன் நடைபெறவில்லை. இந்நிலையில் இரண்டாம் வாரத்தில் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவேண்டும் என்பதால் இன்று திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெற்றது.

சென்ற வாரம் கடந்து வந்த பாதை டாஸ்கின் முடிவில் மொத்தம் 8 போட்டியாளர்கள் பெயர் மட்டும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

ரேகா கேப்ரியலா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, ஆஜித், ரம்யா, ஷிவானி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தான் அந்த எட்டு பேர்.

ஆனால் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் அவரை யாரும் இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. 

அதனால் மீதமிருக்கும் 7 நபர்களில் யாராவது இருவரை மட்டுமே போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்ய முடியும்.

தற்போது எட்டாம் நாள் புது ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் கண்பெஷன் ரூமுக்கு சென்று அவர்கள் விரும்பும் இரண்டு பேரை நாமினேட் செய்கிறார்கள்.

அதில் பெரும்பாலானவர்கள் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்தார்கள். அதற்குக் காரணம் அவர் போலியாக நடிப்பது போல இருக்கிறது என ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் பலரும் கூறி வருவது தான்.

மேலும் ஷிவானி நாராயணனை பல போட்டியாளர்கள் நாமினேட் செய்தார்கள். யாருடனும் அதிகம் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை மீண்டும் அவர் மீது வைத்திருக்கிறார்கள்.

ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி இருவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கப் போவது உறுதி என்பதால் வேறு யாரெல்லாம் அந்த லிஸ்டில் வரப்போகிறார்கள் என்பது இன்று இரவு தெரிந்து விடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--