2020 ஜூன் 04, வியாழக்கிழமை

ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் அஜீத்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விஸ்வாசம்” திரைப்படத்தை அடுத்து, இயக்குநர் வினோத் இயக்கத்தில், அஜீத்குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது.

 

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத், தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.

“விஸ்வாசம்” திரைப்படத்தோடு, “சிவாவை விட்டுவிட்டு வேறு யாராவது இயக்குநருடன் நடிங்க தல” என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், “தீரன் அதிகாரம் ஒன்று” புகழ் வினோத் இயக்கத்தில், அஜீத் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாம். கடந்த சில மாதங்களில், அஜீத்தும் வினோத்தும், இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளனர். இருப்பினும், படம் குறித்த ஒப்பந்தத்தில் இன்னும் அஜீத் கையெழுத்திடவில்லை.

அஜித் - வினோத் இணைந்துப் பணியாற்றும் இத்திரைப்படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.

ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தில், அஜித் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போதே, “நாம் சேர்ந்து தமிழில்ப் படம் பண்ண வேண்டும்” என்று, அஜீத்திடம் ஸ்ரீதேவி கூறினாராம்.

இருப்பினும், திரைப்படம் பண்ணுவதற்குள், ஸ்ரீதேவி இறந்துவிட்டார். ஆனாலும், ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க, போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கத் தயாராகியுள்ளார். இது தொடர்பாக, போனி கபூருடன் அஜீத், தொலைபேசியில் பேசியுள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X